உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

விழுப்புரம்: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் வாயில் துணியை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை 11:30 மணியளவில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் பச்சைத் துண்டை வாயில் கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து சென்றனர். அந்த மனுவில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெஞ்சல் புயலால் விழுப்புரம் உட்பட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. தமிழக அரசு சார்பில் புயலால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் புயல் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம், கோலியனூர், திருவெண்ணெய்நல்லூர், முகையூர் போன்ற அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை சேர்ந்த 41,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை. விடுபட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை