உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பியூட்டி பார்லர், தையற் கடையில் தீ விபத்து

பியூட்டி பார்லர், தையற் கடையில் தீ விபத்து

விழுப்புரம் : விழுப்புரத்தில் மின்கசிவால் பியூட்டி பார்லர், மகளிர் தையற் கடையில் தீ பிடித்து எரிந்து பொருட்கள் சேதமானது.விழுப்புரம், கா.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா. தையற்கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு அருகே, சுகுமாறன் மனைவி பானுமதி என்பவர், பியூட்டி பார்லர் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 2:40 மணிக்கு, 2 கடைகளில் இருந்தும் புகை வெளியேறியது.இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், தீயணைப்பு அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து 2 கடைகளிலும் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீயில், தையற்கடையில் இருந்த தையல் மிஷின்கள், துணிகள், பியூட்டி பார்லரில் 'ஏசி' என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை