உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி விழா : ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா : ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி : செஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து தாசில்தார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, அப்பண்டைராஜன், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் தங்கராமு, ஊடகப்பிரிவு சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சேகர், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவி மற்றும் அரசு அதிகாரிகள், விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினர் பங்கேற்றனர்.கூட்டத்தில் விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது, கடந்த ஆண்டு வைத்த அதே இடங்களில் மட்டும் சிலைகளை வைக்க வேண்டும், புதிய இடங்களுக்கு அனுமதி இல்லை.ரசாயன கலவையில் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரையும் வகையில் களிமண்ணால் செய்ய வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகளை வைக்கக் கூடாது. சிலைகள் வைக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு, மின்விளக்கு வசதியை சிலை வைப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும்.சிலை ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது, சமூகம் சார்ந்த கோஷங்கள் எழுப்பக் கூடாது, சிலைகளை கரைக்கும் 5ஆம் நாள் அன்று பரமக்குடியில் இம்மானுவேல் பூஜைக்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வதால், சிலைகள் கரைப்பதை ஏழாம் நாளுக்கு ஒத்தி வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை