உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டதாரி ஆசிரியர் கூட்டணி நிர்வாக குழு கூட்டம்

பட்டதாரி ஆசிரியர் கூட்டணி நிர்வாக குழு கூட்டம்

விழுப்புரம், மார்ச் 11-விழுப்புரத்தில், தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் செல்வத்துரை, பொருளாளர் குணசேகர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் செல்லையா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில், உரிய திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணை தலைவர்கள் ஞானவேல், ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் முத்துவேல், யுவராஜ், ஜெயந்தி, பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை