பொது விநியோக திட்டத்தின் சேவைகள் குறித்த குறைகேட்பு
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோக திட்டத்தின் சேவைகள் குறித்த குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், தனி தாசில்தார் முத்துக்குமார் (குடிமை பொருள்) தலைமையில்,நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இம்முகாம்களில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மொபைல் எண் பதிவு செய்தல், எண் மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு தனியாக மனு பெறப்பட்டது.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகார சான்று கோருதல் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 36 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.