வாகன ஓட்டிகளுக்கு ெஹல்மெட் விழிப்புணர்வு
வானுார்: ஆரோவில்லில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆரோவில்லில் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஏராளமானோர் பைக்கில் வந்தனர். குயிலாப்பாளையம் சாலையில் ஆரோவில், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.