கிரீன் பாரடைஸ் பள்ளியில் பதவி அமர்த்துதல் விழா
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களை பதவி அமர்த்தும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவர்கள் இசை மற்றும் சபை உறுப்பினர்களின் அணிவகுப்புடன் தொடங்கிய விழாவை தாளாளர் சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தலைமையின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.இந்த ஆண்டு அனைத்து பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி குழு முயற்சியுடன் பணிபுரிவதற்கு மாணவர்களில் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு பதவிகள் அளிக்கப்பட்டன. தலைமை இயக்குனர் வனஜா, செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோரை தொடர்ந்து மற்ற மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.