உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜெ., பிறந்த நாள் விழா

ஜெ., பிறந்த நாள் விழா

வானுார : வானுார் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் சந்திப்பில், அ.தி.மு.க., மண்டல ஐ.டி.,பிரிவு சார்பில், ஜெ., 77 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ் வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், ராமதாஸ், கண்ணன் முன்னிலை வகித்தனர்.விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, வர்த்தக அணி செயலாளர் செல்லபெருமாள், ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், கலைப்பிரிவு செயலாளர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேந்தன்.அணி செயலாளர்கள் குணசேகரன், வீரப்பன், கார்த்திகேயன், ரமேஷ், அப்பாஸ், பாலகிருஷ்ணன், மாலா, ராவுத்தன்குப்பம் சதீஷ், நிர்வாகிகள் தேவமணி, புருேஷாத், விக்னேஷ், வெங்கடேஷ், மதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !