மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
11-Sep-2024
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் சென்ற கராத்தே மாஸ்டர் விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பழனிவேல் , 52; கராத்தே மாஸ்டர். இவர் விழுப்புரத்தில் உள்ள பிரபல துணி கடையில் டெய்லர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடித்து மடப்பட்டலிருந்து-திருக்கோவிலுார் மார்க்கமாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியசெவலை பஸ் நிறுத்தம் அருகே காய வைத்திருந்த கம்பு கதிர்களை கூட்டி போர் வைத்திருந்த கல் மீது ஏறி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பழனிவேலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பழனிவேல் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.
11-Sep-2024