உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோட்டக்கரை - ஆரோவில் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி

கோட்டக்கரை - ஆரோவில் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி

வானுார்: கோட்டக்கரையில் இருந்து ஆரோவில் செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வானுார் அடுத்த இரும்பை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கோட்டக்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மட்டுமின்றி இந்த பகுதி வழியாக ஆரோவில்லுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த கோட்டக்கரை - ஆரோவில் செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. ஒரு சில இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிக்கு உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கடந்த மாதம் கோட்டக்கரை கிராமத்தில், கோவில் திருவிழா நடந்தது.அதற்காக அப்பகுதி மக்களே சாலையில் மண்ணைக் கொட்டி சீரமைத்துள்ளனர். சாலை படுமோசமாக உள்ளதாகவும், அதை சீரைமத்து தரக்கோரியும், அப்பகுதி மக்கள், பிடிஓ., அலுவலகத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.ஆனால், இதுவரை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. எனவே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையை எந்த காரணமும் கூறாமல், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ