உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் ஆணை வழங்கல்

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் ஆணை வழங்கல்

விழுப்புரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் ஆணையை வழங்கினர்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 603 மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள 9,739 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் 68.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஆணை வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 11 ஆயிரத்து 178 மகளிர் சுயஉதவிக் குழு செயல்படுகிறது. இதில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 451 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற வங்கிக் கடனுதவியைக் கொண்டு தங்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான பணிகளை செய்து, கிராம வளர்ச்சியை கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன்கள் தனலட்சுமி, உமேஸ்வரன், கலைச்செல்வி, சிவசக்திவேல், சச்சிதானந்தம், அமுதா ரவிக்குமார், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக்அலி, அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி