உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணிலா புதிய ரக விதைப்பண்ணை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

மணிலா புதிய ரக விதைப்பண்ணை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

வானூர்: கிளியனுார் கிராமத்தில் புதிய வி.ஆர்.ஐ-10 விதைப்பண்ணை வயலினை, வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.வானுார் வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் நடப்பு ஆண்டில் காரிப் பருவத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் தொகுப்பு செயல் விளக்க திடல் அமைத்து புதிய ரகத்தின் உற்பத்தி திறனை கண்டறிய 6 கிராமங்களில் புதிய ரக மணிலா விதை வி.ஆர்.ஐ- 10 வழங்கப்பட்டு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த புதிய ரக மணிலா தொகுப்பு செயல் விளக்க திடல் அமைத்த கிளியனுார் விவசாயி ஜான் பாஸ்கோ, நிலத்தினை வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, மணிலா பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து கரைசல் மீன் அமிலம், பஞ்சகாவியா ஆகியவை தெளித்திட அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், இவர் இயற்கை முறையில் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வானுார் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட தொகுப்பு செயல் விளக்க திடலில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மணிலா விதைகள் விவசாயிகளுக்கு வரும் கார்த்திகை பட்டத்தில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மணிலா புதிய ரகம் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திடுமாறு வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர் மற்றும் விவசாயி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ