உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வரின் வாகனத்தில் தொங்கிய மஸ்தான்

முதல்வரின் வாகனத்தில் தொங்கிய மஸ்தான்

திண்டிவனம் : திண்டிவனம் வருகை தந்த முதல்வரின் வாகனத்தில், மஸ்தான் எம்.எல்.ஏ., படிக்கட்டில் தொங்கியபடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுாரில் நேற்று நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக காரில் சென்றார். அவருக்கு, திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோடு அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களில் 'அப்பா' என்ற அடைமொழி அதிக அளவில் இடம் பெற்றிருந்தது. மேலும், இறையானுாரில், முதல்வர் வாகனம் கடந்த போது, பள்ளி குழந்தைகளை வைத்து, முதல்வரை 'அப்பா' என அழைக்க செய்தார்.இந்நிலையில், மாவட்ட செயலாளர் மஸ்தான் உற்சாக மிகுதியால், முதல்வரின் வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது துாரம் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
பிப் 22, 2025 21:09

இந்த மாதிரியான திமுக அமைச்சர்கள் தான் அதிமுக அமைச்சர்களை, டயர்நக்கி, வேன் தொங்கி, படுத்தகூழை கும்பிடு என்று நக்கல் செய்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள். நமக்கு வாய்த்த அடிமைகள் திறமையானவர்.


orange தமிழன்
பிப் 22, 2025 18:53

இது நிச்சயமாக முதல்வருக்கு தெரிந்து நடந்திருக்காது.....மஸ்தான் தனிச்சயாக செய்திருப்பார்.ஆனால் முதல்வர் இதை கண்டிப்பாக தடுத்திருக்க வேண்டும்..... என்ன செய்வது, இது தான் திராவிட அரசின் லட்சணம்...


RAAJ68
பிப் 22, 2025 17:50

யாருக்கு யார் அப்பா? அசிங்கமாக உள்ளது .முதலில் நிப்பாட்டுங்கள். முதல்வரே உங்களுக்கு கூச்சமாக இல்லையா.


ஆரூர் ரங்
பிப் 22, 2025 13:02

மஸ்தான் வாப்பா என்பாரா? அத்தா என அழைப்பாரா?


அப்பாவி
பிப் 22, 2025 14:56

நைனா ந்னா ஒக்கே.


அப்பாவி
பிப் 22, 2025 08:55

நவீன ஆர்.எம்.வீரப்பனார். நவீன எஸ்.டி.சோமசுந்தரனார்.


புதிய வீடியோ