உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் ஒன்றிய கூட்டம் அடிப்படை வசதிக்கு நிதி

மயிலம் ஒன்றிய கூட்டம் அடிப்படை வசதிக்கு நிதி

மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு  நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கூட்டத்திற்கு, யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ரமா பிரபா, கிராம ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபட்டு முப்புளி, வீடூர்,  மயிலம், நெடிமோழியனுார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சிமென்ட் சாலை, குடிநீர், பள்ளி சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலம் ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ