உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 100 ரூபாய் நாணயம் மயிலம் ஆதீனத்திடம் அமைச்சர் வழங்கல்

100 ரூபாய் நாணயம் மயிலம் ஆதீனத்திடம் அமைச்சர் வழங்கல்

மயிலம்: மயிலத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர், மயிலம் பொம்மபுர ஆதீனத்திடம் வழங்கினார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நத்சிங், கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். தொடர்ந்து மயிலம் முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தானிடமிருந்து, 100 ரூபாய் நாணயத்தை மயிலம் 20ம் பட்ட மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.முன்னதாக மயிலம் முருகர் கோவிலில் அமைச்சர் கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.நிகழ்ச்சியில் ,முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், விழுப்புரம் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சத்யா சரவணன், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் தனுசு, ஒன்றிய இளைஞரணி ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை