மாணவி குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிதி வழங்கல்
திண்டிவனம் : நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு பா.ம.க., எம்.எல்.ஏ., நிதி வழங்கினார்.திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகள் இந்துமதி,19. இவர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, தயாராகி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது குடும்பத்திற்கு, மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் நிதி வழங்கி, ஆறுதல் கூறினார்.