எம்.என். குப்பத்தில் ஜெ., பிறந்த நாள் விழா
கண்டமங்கலம்,; கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ.,வின் 77 வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.எம்.என். குப்பம் திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., , மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மையிலியம்மாள் அய்யப்பன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாரதி, ஒன்றிய நிர்வாகிகள் சவிதா, முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கண்ணப்பன், மணிகண்டன், முத்தையன், விஜய் வரவேற்றனர்.மாவட்ட செயலாளர் ஜெ., வின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.மாவட்ட நிர்வாகிகள் பழனி, ரமேஷ், தெற்கு ஒன்றிய பேரவை செயலாளர் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் கலைவாணி, ஏழுமலை, அணி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஏழுமலை, பத்மநாபன், கலியபெருமாள், சேகர், பிரபு, மணிகண்டன், சத்தியமூர்த்தி, பரதன், ஒன்றிய பேரவை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட பேரவை துணை செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.