மேலும் செய்திகள்
கல்லுாரியில் தேசிய விண்வெளி தினம்
25-Aug-2024
திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் இந்திரா தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். ,கவுரவ விரிவுரையாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சென்னை, பொன்னேரி எல்.என்., அரசு கல்லுாரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் தேவசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விண்வெளி தினத்தில் இயற்பியலின் பங்கு என்று தலைப்பில் சிறப்புரையாற்றினார்.மாணவர்களுக்கு விண்வெளி சம்மந்தமாக பேச்சிபோட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.கல்லுாரி துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். இயற்பியல் துறை கவுரவ வரிவுரையாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.
25-Aug-2024