மேலும் செய்திகள்
வேளாங்கண்ணி கடலில் திண்டுக்கல் சிறுவர்கள் பலி
13-Aug-2024
மரக்காணம்: புதுச்சேரி அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கி மாயமான திருச்சி என்.ஐ.டி., மாணவரை போலீசார் தேடிவருகின்றனர்.திருச்சி என்.ஐ.டி.,யில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 21 மாணவர்கள், 12 மாணவிகள் என 33 பேர் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சுற்றுலாவாக புதுச்சேரிக்கு வந்தனர்.பின்னர், அனைவரும் விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் கடலில் குளித்தனர். காலை நேரம் என்பதால், அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில், 3 மாணவர்கள் சிக்கி, கடலில் மூழ்கினர். உடன் அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு 2 மாணவர்களை மீட்டனர். மெட்டாலஜி, மூன்றாம் ஆண்டு மாணவரான புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஆதித்யா,19; கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார், பிள்ளைச்சாவடி மீனவர்கள் தங்களின் படகுகளில் கடலோர காவல்படை போலீசார் உதவியோடு பல மணி நேரம் தேடியும் மூழ்கிய மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Aug-2024