உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அமைச்சர், மாவட்ட செயலாளருக்கு நோ

அமைச்சர், மாவட்ட செயலாளருக்கு நோ

திருமண விழாவிற்கு வந்த அமைச்சர் உதயநிதி காரில் ஏறிய அமைச்சர், மாவட்ட செயலாளர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.வானுார் அடுத்த பட்டா னுாரில் சமீபத்தில், கடலுார் தி.மு.க., கவுன்சிலர் திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை யில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் அமைச்சர் உதயநிதி வந்தார்.அப்போது, மரக்காணம் பூமீஸ்வரன் கோவில் அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் அமைச்சர் மஸ்தான் கட்சி நிர்வாகிகளுடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் அங்கு வரவேற்பு அளிக்க பயணப் பட்டியலில் இடம்பெறாத நிலையிலும் அமைச்சர் உதயநிதி காரை நிறுத்தி இவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.வழக்கம் போல் மாவட்ட செயலாளரின் சரி இல்லாத ஒருங்கி ணைப்பால் சொற்ப அளவிலான நிர்வாகிகளே வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது, அமைச்சர் உதயநிதியின் காரில் பின்பக்க கதவுகளை திறந்து ஒரு பக்கம் அமைச்சர் மஸ்தானும், மறுபக்கம் மாவட்ட செயலாளர் சேகரும் ஏறினர். கார் புறப்பட இருந்த நிலையில் காரில் ஏறிய வேகத்திலேயே இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் இறங்கினர்.அதே சமயம் கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி காரின் பின் இருக்கையில் அமைச்சர் பொன்முடியும் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணியையும் ஏற்றிக்கொண்டு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றடைந்தனர்.அமைச்சர் மஸ்தானையும் மாவட்ட செயலாளர் சேகரையும் காரில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டதன் காரணம் சொற்ப அளவிலான நிர்வாகிகளுடன் அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்ததே காரணம் எனவும். மேலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., உயர்வதாகவும், வடக்கு மாவட்ட தி.மு.க., தேய்ந்து வருவதும் காரணமாக இருக்கலாம் என தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Siva Balan
செப் 03, 2024 19:06

சேகர் திராவிடனல்ல. ஷத்ரியன். அதனாலேயே இறக்கிவிடப்பட்டார். அடிமை ஷத்திரியர்களை திராவிடர்கள் ஏற்பதில்லை.


theruvasagan
செப் 03, 2024 12:47

கட்சி ஆதரவை பெருக்கும் அமிச்சர்களுக்கு ம.செ களுக்கும் மட்டுமே பின்சீட்டில் இட ஒதுக்கீடு செய்யப்படும். அதுக்கும் குறைவாக செய்து காட்டியவர்கள் வண்டியில் ஏறாமல் பக்கவாட்டில் வண்டியுடன் ஓடிவரலாம். மத்தவங்க எல்லாரும் வண்டி பின்னாடி மூச்சுமுட்ட நாக்குதள்ள ஓடிவர வேணடியதுதான். மாடல் சமூகநீதி ஃபார்முலா.


tmranganathan
செப் 03, 2024 07:22

முதிர் வில்லஉதயை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவனுங்கனபாபர் ஹுமாயுன் அக்பர்காளா? இதை ஒழித்துக்கட்டாதவன் முட்டாள்கள் துரோகிகள் அண்ட் அற்பர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை