மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி
23-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரண்டு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில், பைக்கில் வந்த முதியவர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த ஆ.கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 64; இவர், நேற்று காலை 8:30 மணிக்கு, மாம்பழபட்டு கிராமம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில், பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக மெயின் ரோடிலிருந்து திரும்பினார். அப்போது, திருக்கோவிலூர்-விழுப்புரம் மார்க்கமாக பின்னால் வேகமாக வந்த ஒருவரது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் வந்த நபர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23-Aug-2024