உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி முதியவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தொட்டிக்குடிசை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு, 70; இவர், நேற்று முன்தினம் காலை திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் நோக்கி நடந்து சென்றார்.டி.எடையார் அரசு பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த பல்சர் பைக் இவர் மீது மோதியது. அதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை