ஸ்ரீராம் பள்ளியில் ஓணம் பண்டிகை
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையை முன்னிட்டு, நேற்று காலை பள்ளி வளாகத்தில் அத்தப் பூ கோலம் வரைந்து, சிறப்பு வழிபாடு நடந்தது. பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன் தலைமையில் நடந்த விழாவில், பள்ளியின் முதல்வர் சுரேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பள்ளி மாணவிகள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.