உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

விக்கிரவாண்டி: ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் கூட்டுறவு சங்க ஊழியர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், 43:இவர் விக்கிரவாண்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்யும் பணியில் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பால் கொள்முதல் செய்வதற்காக தனது ஆட்டோவில் எஸ்.குச்சிபாளையம் நோக்கி கருணாகரன் சென்றார். அங்காளம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த பைக் ஒன்று ஆட்டோ மீது மோதியது.இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற கருணாகரன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பைக்கை ஓட்டி வந்த விக்கிரவாண்டியை சேர்ந்த காதர்பாஷா, 23: என்பவரும் காயமடைந்தார்.காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கருணாகரன் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !