மேலும் செய்திகள்
கட்டங்கள் ஆய்வு பணி :மா.க.வாரியம் முடிவு
26-Aug-2024
செஞ்சி: அனந்தபுரம் பேரூராட்சியில் 61 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.அனந்தபுரம் பேரூராட்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடை, அரசு மேல்நிலைப் பள்ளியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வகம் மற்றும் நுாலக கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.பேரூராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, பேரூராட்சி துணை தலைவர் அமுதா கல்யாண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், அவைத் தலைவர் கல்யாண்குமார், பொருளாளர் பாபு , பேரூராட்சி உறுப்பினர்கள் சுமதி, அகல்யா, அன்வர் பாஷா, செல்வி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
26-Aug-2024