உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டோல் கட்டண உயர்வை ரத்து செய்து 25 சதவீதம் குறைக்க வேண்டும் மக்கள் உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

டோல் கட்டண உயர்வை ரத்து செய்து 25 சதவீதம் குறைக்க வேண்டும் மக்கள் உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் கட்டண உயர்வை ரத்து செய்வதோடு, 25 சதவீதம் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் உரிமைகள் கழக முதன்மைச் செயலாளர் கந்தன், மாநிலத் தலைவர் சபரிராஜ் ஆகியோர், மத்திய, மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:பொதுமக்கள், வாகன ஓட்டிகளை பாதிக்கும் டோல்கேட் கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும். மேலும் 25 சதவீதம் குறைக்க வேண்டும். குறைந்த கட்டணமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். கட்டணத்தை உயர்த்துவது மக்களுக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த வசூல், வாகன உரிமையாளர் மற்றும் வாடகை வாகனத்தில் செல்பவர்களின் பாக்கெட்டில் இருந்து பிடிங்கி எடுக்கும் வழிப்பறி கொள்ளை என மக்கள் உணர்கின்றனர்.சாலையை மேம்படுத்த வசூலிப்பு என்றால், வாகனங்களுக்கு சாலை வரி போடுவதேன். சாலை வரியை நிறுத்துங்கள். பஸ், லாரி, கார் போன்ற வாகன ஓட்டிகள், சுங்க கட்டண உயர்வால், தொழில் நலிந்து வருகிறது.இதனைத் தவிர்க்க அனைத்து பொருட்களின் விலையும், வாகன வாடகையும் உயர்த்த வேண்டியுள்ளது. அரசு வாகனங்களுக்கும், அரசியல்வாதிகளின் வாகனங்களுக்கும் கட்டணமில்லை. ஆனால், நடுத்தர மக்களுக்கு மட்டும் கட்டணம் வசூல் என, மக்கள் வேதனைப்படுகின்றனர். எனவே, டோல்கேட் கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ