மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
16-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், எஸ்.சி., எஸ்.டி., தலைவர்களுக்கு வட்டார அளவில் கூட்டம் வைக்க கோரி,கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இதுகுறித்து விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், கலெக்டர் பழனியிடம் அளித்த மனுவில்,விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி., தலைவர்களுக்கு வட்டார அளவில் விழிப்புணர்வு கூட்டத்தை, விழிப்பு கண்காணிப்பு நிலையம் உறுப்பினர்களை கொண்டு நடத்த வேண்டும். இங்குள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், வி.ஏ.ஓ., பணிதள பொறுப்பாளர்களை கொண்டு மாதம் ஒருமுறை ஊராட்சி தொடர்பாகவும், ஊராட்சியில் எவ்வித சட்டம், ஒழுங்கு மற்றும் சமூக பிரச்னைகள் இல்லை என்பதை உறுதி செய்ய கூட்டம் நடத்த வேண்டும்.இந்த அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கும், நிர்வாகத்திற்கும் கலெக்டர் தெரிவிக்க வேண்டும். திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் ஊராட்சி தலைவர் சாதிய வன்கொடுமைகள், வல்லம் பகுதியில் உள்ள ஆனங்கூர் ஊராட்சி தலைவர் சாதிய வன்கொடுமை நடந்ததாக, அளித்த புகார்களின் மீது ஊரக வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்ட முழு விபரங்களை கலெக்டர் ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு முழு விபரங்களை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதில் வி.சி.க., வழக்கறிஞர் தனஞ்செழியன், நிர்வாகிகள் துரைவளவன், பார்வேந்தன், முருகேசன், நவமால் மருதுார் ஊராட்சி தலைவர் ஜெயராணி மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
16-Aug-2024