பா.ஜ.,கையெழுத்து இயக்கம்
திண்டிவனம் : மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் வகையில் பா.ஜ.,சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் திண்டிவனத்தில் நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திண்டிவனம் காந்தி சிலை அருகே பொது மக்களிடம் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு, மாவட்ட தலைவர் வினாயகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெங்கடேசபெருமாள் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சம்பத், பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் எத்திராஜ், பாண்டியன், வழக்கறிஞர் செந்தில், பிறமொழி பிரிவு செயலாளர் வினோத்குமார், மாவட்ட செயலாளர் முருகன், துணைத் தலைவர் முத்துலட்சுமி, மாநில இளைஞரணி தினேஷ்குமார், புஷ்பராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.