மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற இரு கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி தாலுகாவில் ஆசூர் வடக்கில் ஆசூர் கிராமம், ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமம் வருவாய் கிராமங்களாக தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இதில் ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் என்பதை தனியாக பொன்னங்குப்பம் வருவாய் கிராமமாகஅறிவிக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் நேற்று மாலை 5:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யுவராஜ் தலைமையில் ஆசூர், பொன்னங்குப்பம் கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் இரு கிராமத்தினரும் பொன்னங்குப்பம் கிராமம் தனியாக மாற்ற எவ்வித ஆட்சேபனை இல்லை எனவும், ஆசூர் பெரிய ஏரியை இரு கிராமத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். பொதுமக்கள் கருத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தாசில்தார் யுவராஜ் அறிக்கை அனுப்பி வைத்தார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கபிலன், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ.,க்கள் பென்னரசி, ஜெயப்பிரகாஷ், வருவாய் உதவியாளர் சந்திரவள்ளி, ஊராட்சி தலைவர்கள் வேலு, ஞானசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முரளி, ராஜேந்திரன், ரவி, ஜெயபாலன், ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோ உள்ளிட்ட இரு கிராம மக்கள் பங்கேற்றனர்.
17-Aug-2024