அர்ச்சகர் நல அறக்கட்டளை கோரிக்கை ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டியல் இனத்தவர் கிராம குடியிருப்பு இந்து ஆலய மேம்பாடு மற்றும் அர்ச்சகர் நல அறக்கட்டளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பட்டியல் இன பூசாரிகள் சங்க தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் தண்டபாணி, வேலாயுதம், ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.பறையர் பூசாரிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு, எஸ்.சி., - எஸ்.டி., பெடரேஷன் அமைப்பாளர் தனசேகரன், மாநில தலைவர் ராஜன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பட்டியலின மக்கள் தங்கள் வழிபாட்டிற்காக கட்டமைத்து பராமரித்து வரும் பொது மற்றும் தனிநபர் இந்து கோவில்கள் அனைத்தையும் இந்து அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் நிர்வாகம் செய்திட அரசு ஆணை மற்றும் சட்ட விதி திருத்தம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.