உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. சாரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஒலக்கூர் பி.டிஓ.,(கி.ஊ)சரவணக்குமார் வரவேற்றார். ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) விஜயா, தாசில்தார் சிவா, மாவட்ட கவுன்சிலர்கள் ஏழலரசி ஏழுமலை, மனோசித்ரா, சாரம் பஞ்சாயத்து தலைவர் வனஜாராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில், முதல் அமைச்சர் தனிப்பிரிவின் தனி அலுவலர் அரவிந்தன், துணை ஆட்சியர் லட்சுமிபிரியா ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் ஒரு சிலருக்கு வாரிசு சான்றதழ் வழங்கப்பட்டது. முகாமில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தாபதிசொக்கலிங்கம், பி.டி.ஓ., சிலம்புசெல்வர், மேலாளர் ஏகாம்பரம், மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை