ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திண்டிவனத்தில் புதிய ஷோரூம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிய ேஷாரூம் திறப்பு விழா நடந்தது.தென் மாநிலம் முழுதும், வெண்மை நிற ஆடைகளை ராம்ராஜ் நிறுவனம், உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ேஷாரூம்களை திறந்துள்ளது. மேலும், www.ramrajcotton.in, என்ற இணையதளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் புதிய ேஷாரூமை, நேற்று, 60 பி / 115, செஞ்சி சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி அருகில், திண்டிவனம் என்ற, முகவரியில் துவங்கியுள்ளது.ேஷாரூமை, திண்டிவனம் மருத்துவ இயக்குனர் பரசுராமன் திறந்து வைத்தார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் நிர்மலா குத்து விளக்கேற்றி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரமணன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.