உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை விரிவாக்க பணி ஆய்வாளர் ஆய்வு

சாலை விரிவாக்க பணி ஆய்வாளர் ஆய்வு

மயிலம்: மயிலம் - செண்டூர் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மயிலத்தில் பழமையான வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு விழுப்புரம், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானனோர் வருகின்றனர். பங்குனி உத்திர தேர்த்திருவிழா போன்ற விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனைத் தவிர்க்க முதல்வர் சாலை மேம்பாடு பணிகள் திட்டத்தில் மயிலத்தில் இருந்து செண்டூர் வரை 3.7 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்து இரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது.சாலை பணிகளை தொடர்ந்து கல்வெர்ட் கட்டுமான பணி நடக்கிறது. இப்பணியை சாலை ஆய்வாளர் சக்தி முருகன் நேற்று ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை