மேலும் செய்திகள்
ஸ்டேஷனரி கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புக்கு சேதம்
25-Aug-2024
வானுார் : ஆரோவில் அருகே மின்கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது.திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளம் அடுத்த வசந்தபுரம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் மனைவி சீதா, 60; கூரை வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில், பிற்பகல் 2:00 மணிக்கு, வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டிற்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.ஆரோவில் போலீஸ் விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
25-Aug-2024