உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருஷ்ணர் ஜெயந்தியொட்டி பொம்மைகள் விற்பனை

கிருஷ்ணர் ஜெயந்தியொட்டி பொம்மைகள் விற்பனை

விழுப்புரம் : விழுப்புரத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியொட்டி கிருஷ்ணர் பொம்மை விற்பனை நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளான, கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்பட்டது. கோவில்களில் கிருஷ்ணர் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. வீடுகளில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்தும், கிருஷ்ணர் விரும்பும், முருக்கு, சீடை, எல்லடை, வெண்ணெய், நெய் உணவுப்பொருள் வைத்து வழிபட்டு, குழந்தைகளுக்கு வழங்கி வழிபட்டனர். விழுப்புரம் திரு.வி.க., வீதியில் கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி, வித விதமான கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம், பண்ருட்டி பகுதி விற்பனையாளர்கள் பீங்கான், டெரக்கோட்டா, சுடுமண் பொம்மைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். ரூ.50 முதல் ரூ.2,000 வரை அந்த பொம்மைகள் விற்பனைக்கு வழங்கினர். பொது மக்கள் வாங்கி சென்று, வீடுகளில் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !