பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்
விழுப்புரம்: பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் மகாராஜபுரம் காந்தி நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.