உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

வானுார்: வானுார் வட்டார வேளாண்மை துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி தைலாபுரத்தில் உள்ள சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது. வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்று, வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லுாரி மண்ணியல் மற்றும் வேதியியல் துறையின் பேராசிரியர் முனைவர் சங்கர் பங்கேற்று, மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். விழாவில் தைலாபுரம் ஊராட்சித் தலைவர் தனபால், விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினார். மேலும் ஒரு கிராமம், ஒரு பயிர் செயல்விளக்கத்திடலில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். வானூர் வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ரேகா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாழ்வரசி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரசேகர் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ