உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் காவலர்களுக்கு சிறப்பு சட்ட வகுப்பு

பெண் காவலர்களுக்கு சிறப்பு சட்ட வகுப்பு

விழுப்புரம்: காவலர் பயிற்சி பள்ளியில், பெண் காவலர்களுக்கு, சிறப்பு சட்ட வகுப்பு பயிற்சி நடந்தது.விழுப்புரம், கொல்லியங்குணத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 276 ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நடந்து வருகிறது. இவர்களுக்கான சிறப்பு சட்ட வகுப்பில், டி.எஸ்.பி., பிரகாஷ் கலந்துகொண்டு, பயிற்சியளித்தார்.அவர், போலீசார், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். காவலர்களாகிய நாம் பணி புரியும்போது, பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் பற்றியும், காவல்துறையின் நன்மதிப்பை எவ்வாறு காக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார். பயிற்சி பள்ளி முதல்வர் எட்டியப்பன், பயிற்சி இன்ஸ்பெக்டர் பாலின், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ