மாணவர் சேர்க்கை
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழா நடந்தது.தலைமை ஆசிரியர் செல்லையா தலைமை தாங்கி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்தார். மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.