உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவ விழா

அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவ விழா

விழுப்புரம்: மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், தீபாராதனையும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை