உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாணக்யா பள்ளியில் ஆசிரியர் தின விழா 

சாணக்யா பள்ளியில் ஆசிரியர் தின விழா 

திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு சாணக்யா கல்வி குழுமத்தின் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். ஆசிரியர் ஷாலினி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி