மேலும் செய்திகள்
பைக் விபத்தில் வாலிபர் பலி
29-Aug-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பைக்கில் சென்ற தனியார் பள்ளி பஸ் டிரைவர், நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; கடலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் பைக்கில் ராம்பாக்கத்தில் இருந்து, கொங்கம்பட்டு நோக்கிச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Aug-2024