உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் தனது மது வாங்கித் தராத நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சந்தோஷ், 21; இவருடைய சகோதரியின் திருமணத்திற்காக கூட்டேரிப்பட்டில் தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.அப்பொழுது கூட்டேரிப்பட்டைச் சேர்ந்த அவரது நண்பர் விஸ்வநாதன் மகன் வசந்தகுமார், 21; தனக்கு மது வாங்கி தர வேண்டுமென கேட்டுள்ளார்.இதற்கு மறுத்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த வசந்தகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்து விடுவேன் என சந்தோைஷ மிரட்டியுள்ளார்.இது குறித்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ