மேலும் செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
26-Feb-2025
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானகொள்ளையும், 2ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. இன்று, 7ம் நாள் விழாவாக மாலை 4:30 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.விழாவில், தமிழகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
26-Feb-2025