மேலும் செய்திகள்
மின் கம்பி உரசி வைக்கோல் டிராக்டரில் தீ
17-Feb-2025
வைக்கோல் டிராக்டரில் தீ
20-Feb-2025
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் தீ பிடித்து எரிந்து சேதமானது.விழுப்புரம் அடுத்த கொட்டியம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 47; விவசாயி. இவர், புதியதாக வாங்கிய டிராக்டரில் நேற்று அயினம்பாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு கொட்டியாம்பூண்டி திரும்பினார்.பிற்பகல் 2:30 மணியளவில் அயனம்பாளையம் சாலை வளைவில் திரும்பிய போது, மேலே சென்ற மின் கம்பியில், வைக்கோல் உரசியது.இதனால் மின்கம்பி அறுந்து வைக்கோல் மீது விழுந்ததில் வைக்கோல் எரிந்தது. உடன், ஏழுமலை, டிராக்டரை நிறுத்தி விட்டு கீழே குதித்து தப்பினார்.தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வைகோலுடன் சேர்ந்து டிராக்டர் எரிந்து சேதமானது.
17-Feb-2025
20-Feb-2025