விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தனி தாசில்தார்கள் விழுப்புரம் நிலம் எடுப்பு பிரிவு திருநாவுக்கரசு, திண்டிவனம் - நகரி அலகு 2, புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கும், இங்கிருந்த ராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசு கேபிள் டிவி பிரிவிற்கும், இங்கிருந்த கனிமொழி, விழுப்புரம் வருவாய் தாசில்தாராகவும் இங்கிருந்த வசந்தகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் (பறக்கும் படை) பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் (பறக்கும் படை) யுவராஜ், திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், இங்கிருந்த பழனி, மரக்காணம் வருவாய் தாசில்தாராகவும், இங்கிருந்த பாலமுருகன், திண்டிவனம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், இங்கிருந்த கார்த்திகேயன், விழுப்புரம் ஆதிதிராவிடர் நலம் பிரிவிற்கும், இங்கிருந்த செந்தில்குமார் திருவெண்ணெய்நல்லுார் வருவாய் தாசில்தாராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் வருவாய் தாசில்தார் ராஜ்குமார், விழுப்புரம் நிலம் கையகம் மற்றும் மேலாண்மை அலகு, நெடுஞ்சாலைகள் பிரிவிற்கும், இங்கிருந்த நீலவேணி, மேல்மலையனுார் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், இங்கிருந்த செல்வகுமார், திண்டிவனம் நிலம் எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை -45சி பிரிவிற்கும், இங்கிருந்த ரமேஷ், விழுப்புரம் நிலம் எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை 45 ஏ, அலகு-2 பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.