மேலும் செய்திகள்
தீர்த்தவாரி உற்சவம்
05-Aug-2024
மயிலம்: மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டையில் மரக்கரி மூட்டைகளை நேற்று சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கி மரக்கரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றது. இந்த லாரி நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை சாலையில் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது இந்த விபத்தில் கள்ளக்குறிச்சி அடுத்த நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் 31; என்பவரின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் காயமடைந்த டிரைவரை மீட்டு 108 ஆம்புலன் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Aug-2024