மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
28-Aug-2024
வானுார்: ராமானுஜர் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி உறியடி உற்சவ விழா நடந்தது.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ராமானுஜர் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்து, நேற்று முன்தினம் மண்டல அபிேஷக நிறைவு விழா நடந்தது.தொடர்ந்து, கிருஷ்ணஜெயந்தி உறியடி உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பிற்பகல் 2:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ணர் வேடமிட்டவர் பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவற்றை பானைகளில் இருந்து எடுத்து வந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாவாடைப்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
28-Aug-2024