உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய அளவிலான கராத்தே போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை

விழுப்புரம்: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் பதக்கம் வென்றனர்.தேசிய அளவிலான ஷிட்டோரியா கராத்தே போட்டிகள், கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதி விஜயாநகரில், கடந்த ஆக.23ம் தேதி தொடங்கி ஆக.25ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில், நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலிருந்து கராத்தே வீரர்கள், குறிப்பாக 12 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 35 கிலோ எடை பிரிவு முதல் 65 கிலோ எடை வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 20 கராத்தே மாணவ, மாணவிகள், தலைமை பயிற்சியாளர் ரகுராமன் தலைமையில் கலந்துகொண்டனர். போட்டியின் நிறைவாக, 18 வயது (குமித்தே பிரிவு) சீனியர் பிரிவில், மாணவி இந்துமதி, பூங்கோதை ஆகியோர் தங்கம் பதக்கம் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி யுவஸ்ரீ வெள்ளி பதக்கமும், மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் (60-65 கிலோ எடை பிரிவில்) வெள்ளி பதக்கமும், 18 வயதுக்குட்பட்டோர் 50-60 கிலோ எடை பிரிவில் மாணவர் மகேந்திரன் தங்க பதக்கமும், 45 கிலோ எடை பிரிவில் மாணவி பவாணி வெண்கல பதக்கமும், 50-60 கிலோ சீனியர் பிரிவில் மாணவர் ரஞ்சித்குமார் வெள்ளி பதக்கமும், 50-55 கிலோ பிரிவில் தீபன்ராஜ் தங்க பதக்கமும், 35-45 கிலோ சப் ஜூனியர் பிரிவில் மாணவர்கள் சித்தன் சிவம், மணிகண்டன் ஆகியோர் தங்க பதக்கமும் வென்றனர்.அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள், அடுத்து உலகளவில் சிங்கப்பூரில் வரும் நவம்பரில் நடக்கும் ஆசிய பசுபிக் ஷீட்டோ போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாக, பயிற்சியாளர் ரகுராமன் தெரிவித்தார். பதக்கம் வென்று விழுப்புரம் வந்த மாணவர்கள், மாநில கைப்பந்து கழக செயலர் கவுதம்சிகாமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ