உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் மூங்கில் அம்மன் கோயில் வீதியிலுள்ள சுந்தர விநாயகர் கோவில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.இதையொட்டி கடந்த 4ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடும் அதனை அடுத்து காலை 8.45 மணிக்கு சுந்தர விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !